அகில இந்திய தொழிற்பழகுனர் தேர்வுக்கு ஐடிஐ படித்தவர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ்பெற்றவர்கள், தொழில் பழகுநர் பயிற்சியை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான செய்முறை தேர்வு மே 16,17,18 ல் நடைபெறுகிறது.
பொறியியல் படம் வரைதல் தேர்வு மே 15, ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மே 9,10,11 ல் நடைபெறுகிறது.
விண்ணப்பங்கள் விருதுநகர், உமறுபுலவர், நாகலாபுரம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்வழங்கப்படுகிறது.
ஐ.டி.ஐ முடித்து தொழிற்பயிற்சி பெறாத மாணவர்கள், வாய்ப்பை பயன்படுத்த கலெக்டர் சிவஞானம் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment