Friday, 20 April 2018

கிராம உதவியாளர் பணி

செஞ்சி வட்டத்தில் காலியாக உள்ள 13 கிராமங்களுக்கு உதவியாளர்களை நேரடி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிட கிராமங்களின் விவரம்:அஞ்சாஞ்சேரி, இல்லோடு, கடம்பூர், கல்லாலிப்பட்டு, கள்ளப்புலியூர், காரியமங்கலம், கொரவனந்தல், மரூர், மேலத்திப்பாக்கம், மேல்கூடலூர் மேல்ஒலக்கூர், தையூர், வீரணாமூர்.


கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.


வயது வரம்பு: 1-1-2018 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அருந்ததியர், பழங்குடியினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர், முஸ்லிம் வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 இதர வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணி நியமனம் செய்யப்படும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும்.


சம்பளம்: 11,100


கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காலியாக உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ அல்லது 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.


விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றுகளை நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும், அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களையும் தவறாது இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை கைப்பட எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என செஞ்சி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:25.4.2018


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...