மத்திய அரசின் பயிற்சியுடன் கூடிய படிப்பை ஊக்குவிக்கும் விதமாக 'Board of Apprenticeship Training’ தென் மண்டல அமைப்பு சென்னையில் நிறுவப்பட்டது. இது மாணவர்களுக்கு ஸ்டைபண்டுடன் கூடிய பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக Graduate Apprentice பிரிவில் 325 இடங்களும், Diploma Technician Apprentice பிரிவில் 175 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
காலியிட விபரம் : Graduate Apprentice பிரிவில்
Civil Engineering - 300
Electrical & Electronics Engineering (EEE) - 15
Electronics & Communication Engineering (ECE) - 10
டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில்
1 . Civil Engineering - 150
2 . Electrical & Electronics Engineering (EEE) - 15
3. Electronics & Communication Engineering (ECE) - 10 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம் : ஒரு வருட காலத்திற்கு அப்ரென்டிஸ் பயிற்சி இருக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, மதிப்பெண் அடிப்படையில் தகுதி நிர்ணயம் போன்ற முறைகளில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.12.2017
கூடுதல் விபரங்களுக்கு : www.boatsr-apprentice.tn.nic.in
No comments:
Post a Comment