Sunday, 10 December 2017

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் :

தென் கிழக்கு மத்திய ரயில்வேயின்

நாக்பூர் கோட்டம் -  298

மோடிபாக் ஒர்க் ஷாப் – 15

ராய்பூர் கோட்டம் – 255

ராய்பூர் வேகன் ஒர்க் ஷாப் – 50

பிலாஸ்பூர் கோட்டம் - 432 என மொத்தம் 1,050 காலியிடங்கள் உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும், NCVT  அங்கீகாரம் பெற்ற ITI படிப்பையும் முடித்திருப்பது தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.12.2017

விபரங்களுக்கு : www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,382

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...