திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நியாயவிலைக் கடை விற்பனையாளர்
காலியிடங்கள்: 187
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000
பணி: கட்டுநர்
காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.4250. அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.3,900 – 11,000
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். PWD/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.MBC/DC/SC/SCA/ST/விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு ரூ.150. கட்டுநர் பணிக்கு ரூ.100. இதனை “மாவட்ட ஆள்சேர்ப்பு பணி நிலையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்” என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பப்படிவத்தின் எண் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப்படிவங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு அத்துடன் சுயமுகவரி எழுதப்பட்ட 24x10 cm அளவுள்ள தபால் கவரில் ரூ.5 மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால்கவர், புகைப்படம், டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனை.த்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்,
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
அரசு பல்துறை கட்டிட வளாகம்,
இரண்டாம் தளம் காஜாமலை (மன்னார்புரம் அருகில்)
திருச்சிராப்பள்ளி – 620 020
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.12.2017
கூடுதல் தகவல்களுக்கு Click Here
No comments:
Post a Comment