Monday, 4 December 2017

உள்நாட்டு நீர்போக்குவரத்து ஆணையத்தில் வேலை

நொய்டாவில் உள்ள “Inland Waterways Authority of India” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Technical Assistant

காலியிடங்கள்: 10

சம்பளம்: 9,300 – 34,800

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil/Mechanical/Marine Engineering/Naval Architecture பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

எழுத்துத்தேர்விற்கு General Reasoning, General Awareness, General English, Numerical Ability, General Arithmetic பாடப்பிரிவுகளிலிருந்து இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.iwai.nic.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...