Monday, 14 May 2018

இந்தியன் ரயில்வே பணிகள்

இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள "குரூப் C மற்றும் குரூப் D" பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Group 'C' (Scouts & Guides Quota) 

காலியிடங்கள்: 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ மற்றும் பிளஸ் டூ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Group 'D' (Scouts & Guides Quota) 

காலியிடங்கள்: 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Scouts, Guides, Rover, Ranger, Himalayan Wood Badge பெற்றிருக்க வேண்டும். தேசிய மற்றும் இந்திய ரயில்வே அளவில் நடைபெற்ற ஏதேனும் இரண்டு நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 6வது சம்பளக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, Scouts & Guides தகுதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ner.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ner.indianrailways.gov.in/uploads/files/1523942839737-RRC Ad (English).pdf


 


No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...