விழுப்புரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஊராட்சி செயலாளர் (Panchayat Secretaries)
காலியிடங்கள்: 50
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://viluppuram.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய சான்று நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலக தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.4.2018
கூடுதல் தகவல்களுக்கு http://viluppuram.tn.nic.in/villageasstpage.htm
No comments:
Post a Comment