Monday, 25 December 2017

NICPR ல் கிளார்க் & டிரைவர் பணிகள்

நொய்டாவில் உள்ள “National Institute of Cancer Prevention and Research” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Personal Assistant

காலியிடம்: 1

சம்பளம்: 9,300 – 34,800

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலம்/ஹிந்தியில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Stenographer

காலியிடம்: 1

சம்பளம்: 5,200 – 20,200

வயது: 18 முதல்  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம்/ஹிந்தியில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Lower Divisional Clerk

காலியிடம்: 4

சம்பளம்: 5,200 – 20,200

வயது: 18 முதல்  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Staff Car Driver

காலியிடம்: 4

சம்பளம்:5,200 – 20,200

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை:

OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில்  தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, ஓட்டுநர் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.300. இதனை  “Director, NICPR, Noida” எனற பெயரில் மாற்றத்தக்க வகையில் IPO/ டி.டி. யாக எடுக்க வேண்டும்.

பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.nicpr.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director,

National Institute of  Cancer Prevention and Research (ICMR),

Plot No. I-7, Sector -39,

Noida – 201 301 (UP)

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 6.1.2018

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...