இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியில் Airports Authority Of India (AAI) ஈடுபட்டு வருகிறது. இதில் இளநிலை உதவியாளர் (Fire Services) பிரிவில் காலியாக உள்ள 170 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 170
வயது: 31.12.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 3 வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பயர் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தவிர பிளஸ் 2 படிப்பை, குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை, உடல்தகுதி தேர்வு, டிரைவிங் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம்: 1,000 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2017
கூடுதல் விபரங்களுக்கு: www.aai.aero/en/careers/recruitment
No comments:
Post a Comment