இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Airmen (Group ‘X’ and Group ‘Y’ Trades)
சம்பளம்: Group ‘X’ Trade: Rs.33,100
Group ‘Y’ Trade: Rs. 26,900
வயது: 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Group ‘X’ பணிக்கு கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி அல்லது Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Group ‘Y’பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் Reasoning, General Awareness, English, Physics, Mathematics பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.14,600 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Thumb Impression, பிறப்பு சான்று, பெற்றோர் கையொப்பம், கல்வித்தகுதி சான்றுகள் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2017 – 12.1.2018
கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in
No comments:
Post a Comment