Friday, 1 December 2017

தமிழ்நாட்டின் மாவட்ட நியாய விலைக் கடைகளில் 1074 பணிகள்

தமிழ்நாட்டின் திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1074

பணியின் பெயர்: நியாயவிலைக் கடை விற்பனையாளர்
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000
கல்வித்தகுதி: +2தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: கட்டுநர்
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.4,250, அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம்.
மேற்கண்ட பணியிடங்கள் நேரடி நியமனத்தின் போது அரசுப் பணிக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  முப்படி செலான் சங்க செலான் மூலமாக அந்தந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எந்த கிளையிலும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், ..........

விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ, அந்தந்த மாவட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.12.2017

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...