கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு (TNSET-2018) வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு (NET) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (SET) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 21 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்
பிரிவுகள் :
Chemical Sciences
Commerce
Computer Science & Application
Economics, Education
Electronics
Geography
Hindi
History
Home Science
Journalism & Mass Communication
Law
Life Sciences
Management
Mathematical Sciences
Physical Sciences
Political Sciences
Psychology
Social Work
Sociology
Earth Science
Atmospheric Science
Ocean and Planetary Sciences
English
Sanskrit
Tamil
Telugu
விண்ணப்பக்கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி (கிரீமி லேயர்) பிரிவினருக்கும் ரூ.1500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) பிரிவினருக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Commerce
Computer Science & Application
Economics, Education
Electronics
Geography
Hindi
History
Home Science
Journalism & Mass Communication
Law
Life Sciences
Management
Mathematical Sciences
Physical Sciences
Political Sciences
Psychology
Social Work
Sociology
Earth Science
Atmospheric Science
Ocean and Planetary Sciences
English
Sanskrit
Tamil
Telugu
விண்ணப்பக்கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி (கிரீமி லேயர்) பிரிவினருக்கும் ரூ.1500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) பிரிவினருக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.2.2018
தேர்வு நடைபெறும் நாள்: 4.3.2018
கூடுதல் விவரங்களுக்கு www.tnsetexam2018mtwu.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment