மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (CISF) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Constable (Tradesmen)
சம்பளம்: 21,700 – 69,100
வயது: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவில் முறையான தொழிற் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, Documentation, தொழிற்திறன் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2017
டிரேடு வாரியான காலியிடங்கள், உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, எழுத்து தேர்வு உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.cisfrectt.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
No comments:
Post a Comment