Sunday, 10 December 2017

இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள்

இந்திய கடற்படையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Sailor (Artificer Apprentice)

சம்பளம்: 21,700 – 69,100

வயது: 1.8.1998 முதல்  31.7.2001 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கணிதப் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:

உயரம்: 152 cm

மார்பளவு: 5 cm சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு:

1.6 கி.மீ தூரத்தை  7 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். Squat Ups-20, Push Ups-10.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்விற்கு  English, Science, Mathematics,  General Knowledge பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்விற்கான அட்மிட் கார்டை ஜனவரி 2018 இறுதியில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

தேர்வுகளின் போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் இருப்பிட சான்று மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 9 வாரங்களுக்கு பயிற்சி நடைபெறும்.

பயிற்சியின் போது மாதம் ரூ. உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி 2018-ல் INS Chilka –வில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள  வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2017

கூடுதல் தகவல்களுக்கு www.joinindiannavy.gov.in

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...